டேனியல் பூர்டன் (Daniel Bourdon) என்ற அந்த பிரெஞ்சு அதிகாரி எழுதியுள்ள ’டயானா: அந்த இரவு’ (Diana: That night) என்ற அந்த புத்தகத்தில், 1997ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் திகதி டயானா கார் விபத்தில் இறந்ததற்கு பிறகு அவரது அணியினர் டயானாவின் சடலத்தை பாதுகாக்க நேர்ந்ததை பற்றி எழுதியுள்ளார்.
அந்த புத்தகத்தில் அவர், இளவரசியை பாதுகாக்க கடமையில் இல்லாமல் குடித்து கொண்டிருந்த காவலர் ஒருவர் பாதுகாப்பு பணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த புத்தகத்தை பற்றி கூறுகையில், என்னுடைய இந்த புத்தகம் அந்த விபத்தின் எதிர் விசாரணை அல்ல, அன்று நடந்ததை உள்ளபடி சொல்வதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது.
என்னை பொருத்தவரை, இளவரசி டயானா போன்ற ஒரு பிரபலத்திற்கு உரிய பாதுகாப்பு அவருக்கு அளிக்கப்படவில்லை, இந்த பாதுகாப்பு குளறுபடிகளால் தான் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
விபத்தையடுத்து பாரிஸ் மருத்துவமனையின் பிணவறையில் இருந்த டயானாவின் சடலத்தை பூர்டன் பாதுகாத்துள்ளார்.
அதுபற்றி அவர் கூறுகையில், அது ஒரு கசப்பான தருணம், அன்று இரவு நான் அவர் உடல் அருகே 15 நிமிடங்கள் நின்றேன்.
டயானாவின் முகம் அற்புதமாக இருந்தது, அவர் தூங்குவது போன்று இருந்தது. நான் அவரிடம் பேசினேன், என்னால் உங்கள் விதியை காணமுடிகிறது என்று தெரிவித்தேன் என்று கூறியுள்ளார்.
இந்த கோர விபத்தை அடுத்து நடந்த விசாரணையில், டயானாவின் ஓட்டுனர் சட்ட வரம்பிற்கு உட்பட்ட அளவைவிட மூன்று மடங்கு அதிக அளவு ஆல்கஹால் அருந்தியது ரத்த பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் காரை பின் தொடர்ந்துவந்த பாப்பராசியை தவிர்க்க வண்டியை வேகமாக செலுத்தியதாலுமே விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் இளவரசி டயானா, அவரது காதலன் ஃபயேத் (Fayed) மற்றும் ஓட்டுனர் மூன்று பேருமே உயிரிழந்தனர்.
மேலும், இந்த விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒருவரான பாதுகாவலரும் நடந்தது எதுவுமே தனக்கு ஞாபகத்தில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
கீழ் உள்ள FACEBOOK அடையாளத்தினை அழுத்தி எமது பக்கத்தினை லைக் செய்து ஊக்கப்படுத்துங்கள்...
கீழ் உள்ள FACEBOOK அடையாளத்தினை அழுத்தி எமது பக்கத்தினை லைக் செய்து ஊக்கப்படுத்துங்கள்...
No comments:
Post a Comment
Leave A Reply