காஸாவுக்கு எதிரான இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதலைக் கண்டித்து ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் தடைகளையும் மீறி இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.
கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்காக ஏற்கனவே ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தபோதிலும் நீதிமன்றம் அதற்குத் தடை உத்தரவு பிறப்பித்ததால் மாளிகாவத்தையில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அழைத்துவரப்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையகத்திலிருந்து பிற்பகல் ஒரு மணிக்கு பஞ்சிகாவத்தை சந்தியை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாகச் சென்றனர். மாளிகாவத்தை பொலிஸ் நிலையம் வரை மாத்திரமே ஊர்வலம் சென்றது.
அந்த இடத்தில் வைத்து பொலிஸார் ஊர்வலத்தைத் தடுத்துநிறுத்தினர். இதனால், அவ்விடத்திலேயே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இஸ்ரேலுக்கு எதிரான கோஷங்கள் மும்மொழிகளிலும் எழுப்பப்பட்டன.
குறிப்பாக, இஸ்ரேலுடனான உறவை இலங்கை அரசு துண்டிக்கவேண்டும்; இஸ்ரேலின் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. விசாரணைகளை நடத்தவேண்டும்; இஸ்ரேலுக்கு ஐ.நா. அமைதிப்படைகளை அனுப்பி இஸ்ரேலுக்கு எதிரான யுத்தத்தைப் பிரகடனப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னுரைக்கப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக பெளத்த பிக்குகள் பலர் இரண்டு ஜீப்களில் மாளிகாவத்தைக்கு வந்தனர். பொலிஸார் அவர்களது திட்டத்துக்கு இடம்கொடுக்காது அவர்களைத் திருப்பி அனுப்பினர்.
"இது காலிக்குச் செல்லும் பாதை அல்ல. இது மாளிகாவத்தை. தயவுசெய்து திரும்பச்சென்றுவிடுங்கள்'' என்று பொலிஸார் பிக்குகளிடம் கூறியே அவர்களைத் திருப்பி அனுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பு, புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகவே நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து - அதாவது, இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து - காஸா மீதான இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதலை நியாயப்படுத்தி - அத்தாக்குதலைத் தொடருமாறு கோரி பொதுபலசேனாவும் இன்று மருதானையில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தத் திட்டமிட்டிருந்தது.
மேற்படி இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு கொழும்புக் கோட்டை நீதிமன்றம் தவ்ஹீத் ஜமாஅத், பொதுபலசேனா போன்ற அமைப்புகளுக்கு தடை உத்தரவு பிறப்பித்தது.
இதனால், தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. பொதுபலசேனா ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டது.
இது தொடர்பில் பொதுபலசேனாவைத் தொடர்புகொண்டு கேட்டபோது நீதிமன்ற உத்தரவு காரணமாக ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டதாகவும் அந்த ஆர்ப்பாட்டம் மீண்டும் நடத்தப்படமாட்டாது என்றும் தெரிவித்தது.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, August 14, 2014
தடைகளை மீறி இஸ்ரேலுக்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்! பின்வாங்கியது பொதுபலசேனா!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பவள விழா (75ஆம் ஆண்டு) தொடக்க உரையின் போது பொழிந்த கவி...
-
பிரதான போதைப்பொருள் கடத்தல் குழுவொன்றின் தலைவர் மெக்ஸகோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
நிந்தவூர் அல்-ஈமான் அழைப்பு வழிகாட்டல் நிலைய ஜனாஸா குழுவிற்கான பயிற்சிக் கருத்தரங்கு நேற்று செவ்வாய்க் கிழமை (08-04-2014) அல்-ஈமான் அ...
-
இவர் பெயர் டேம்மிட்சல் வடநாட்டை சார்ந்தவர். இவர் ஒருநாள் சாலை ஓரம் நடந்து சென்றபோது சாலையோரம் ஒரு மலைபாம்பு அடிபட்டு கிடந்ததை கண்டார்.
No comments:
Post a Comment
Leave A Reply