blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, August 6, 2014

கச்சத்தீவு விவகாரத்தில் இரு நாட்டு அரசாங்கங்களே தீர்மானம் எடுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

கச்சத்தீவு விவகாரத்தில் இரு நாட்டு அரசாங்கங்களே தீர்மானம் எடுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்கச்சத்தீவு விவகாரத்தில் இலங்கை – இந்திய அரசாங்கங்களே தீர்வு காண வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.


கச்சத்தீவை அண்மித்த பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான உரிமை உள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கொன்றை விசாரித்தபோதே நீதிமன்றம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை இந்திய அரசாங்கங்கள் இந்தப் பிரச்சினைத் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கச்சத்தீவு விவகாரத்தில் நீதிமன்றம் நேரடியாக தலையிட முடியாது எனவும் இதன்போது நீதிபதிகள் சுட்டிக்காட்டியதாக தமிழக தகவல்கள் கூறுகின்றன.

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது எனவும் அங்கு மீன்பிடிப்பதற்கான உரிமை இந்திய மீனவர்களுக்கு இல்லை எனவும் மத்திய அரசாங்கம் சார்பில் ஏற்கனவே இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►