விழா புலமை பரிசில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் விழா 09.08.2014 ஆம் திகதி சமூக அபிவிருத்தி ஜய்க்கிய ஒன்றியத்தின் தலைவர் சாமஸ்ரீரி தேசமான்ய
ஜமால் ஜே.பி தலைமையில் சாய்ந்தமருது லீமெரிடியன்
மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலாநிதி ஸிராஸ் மீராசாஹிபு கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக மதுரை கமாராஜா மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கல்முனைக்கிளை இணைப்பாளரும், செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஸ்தாபக தலைவருமான றினோஸ் ஹனீபா, முஸ்லிம் லிபரல் கட்சியின் தலைவர் எம்.எம் இஸ்மாயில், செறோ அமைப்பின் தலைவர் ஏ.பி அப்துல் கபூர் ஜே.பி, நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம் உதுமாலெப்பை, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை உத்தியோகத்தர் எம்.எ.சி பாயிஸ் கரீம், கிலசிக் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம் பசீர் ஜே.பி, மற்றும் அறிப்பாளர் ஸாஹிர் கரீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் புலமை பரிசில் சித்தியடைந்த கல்முனை வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் வலது குறைந்தவர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply