விடைத்தாள் சரிபார்க்கும் பணிகளுக்காக முற்றாக மூடப்படும் 10 பாடசாலைகள் எதிர்வரும் மாதம் 15 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், 11 பாடசாலைகளின் சில வகுப்பறைகள் மாத்திரம் விடைத்தாள் திருத்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் நிலையில், அவை எதிர்வரும் 12 ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.
இதன்படி, உயர்தரப் பரீட்சை விடைத்தாள் சரிபார்க்கும் பணிகளுக்காக கொழும்பு றோயல் கல்லூரி, விசாகா வித்தியாலயம், களுத்துறை திஸ்ஸ மத்திய மகா வித்தியாலயம் குருணாகலை மலியதேவ வித்தியாலயம் என்பன முற்றாக மூடப்படும் முக்கிய பாடசாலைகளில் உள்ளடங்குகின்றன.
இதுதவிர கண்டி - கிங்ஸ்வுட் வித்தியாலயம் காலி - வித்தியாலோக வித்தியாலயம், பதுளை - விகாரமகாதேவி வித்தியாலயம், கேகாலை மகளீர் வித்தியாலயம், குளியாபிட்டிய புனித ஜோசப் மகா வித்தியாலயம், மற்றும் ரத்தினபுரி பர்கஸன் உயர் பாடசாலை என்பனவும் முற்றாக மூடப்படவுள்ளன.
வகுப்பறைகள் மாத்திரம் பயன்படுத்தப்படும் பாடசாலைகளுள் கொழும்பு இந்து கல்லூரி, கம்பஹா பண்டாரநாயக்க மகா வித்தியாயலம், மாத்தறை சுஜாதா வித்தியாலயம், கண்டி புஸ்பானந்த மகளீர் வித்தியாலயம், அனுராதபுரம் மத்திய மகாவித்தியாலயம் என்பன உள்ளடங்குகின்றன.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
கீழ் உள்ள FACEBOOK அடையாளத்தினை அழுத்தி எமது பக்கத்தினை லைக் செய்து ஊக்கப்படுத்துங்கள்...
No comments:
Post a Comment
Leave A Reply