அதிலும் பாம்பு உணவுகள் என்றால் இங்குள்ள மக்களுக்கு
கொள்ளை பிரியம் மேலும் பாம்புகறி மற்றும் பாம்பு சூப் சாப்பிட்டால்
உடல்நலம் மேம்படும் என்பது அங்குள்ள மக்களின் நம்பிக்கை இதனால் இந்த
பகுதியில் ஏராளமான பாம்புக்கறி உணவகங்கள் உள்ளன.
இந்நிலையில் நேற்று
முன்தினம் ஒரு உணவகத்திற்கு உயிருடன் பிடித்து வரப்பட்ட ராஜநாகத்தை
சமையல்காரர் பெங் பென், சமையலுக்காக அதன் தலையை வெட்டினார். அப்போது
வெட்டப்பட்ட தலை அருகேயே துடித்துக்கொண்டிருந்தது.
இந்நிலையிட்ல உடலை
எடுத்து சூப் வைத்தார். 20நிமிடத்திற்கு பின் சூப் தயாரானபிறகு கழிவுகளை
எடுத்து குப்பையில் வீசப்போனார். அப்போது பாம்பின் தலையை எடுக்க அவர்
முயன்றார்.
இந்நிலையில் பெங் பென்ன்
கையை துடித்துக்கொண்டிருந்த ராஜநாகம் திடீரென கவ்வி கடித்தது. இதில்அவரது
உடல் முழுவதும் விஷம் ஏறி கீழே விழுந்தார்.
வலியால் துடித்தபடி உயிருக்கு
போராடிக்கொண்டிருந்த அவரை மருத்துவமனைக்கு உடன் இருந்தவர்கள் கொண்டு
சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
பொதுவாக ராஜநாகம்
உள்ளிட்ட பாம்புகள் தலைவெட்டப்பட்ட பிறகு ஒரு மணி நேரம் வரை உயிருடன்
துடித்துக்கொண்டு இருக்கும்.
இதனை சரியாக கவனிக்கமால் சமையல்காரர் பெங்
பென் தொட முயன்றதால் பரிதாபமாக உயிரிழந்தார்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
கீழ் உள்ள FACEBOOK அடையாளத்தினை அழுத்தி எமது பக்கத்தினை லைக் செய்து ஊக்கப்படுத்துங்கள்...
கீழ் உள்ள FACEBOOK அடையாளத்தினை அழுத்தி எமது பக்கத்தினை லைக் செய்து ஊக்கப்படுத்துங்கள்...
No comments:
Post a Comment
Leave A Reply