டெரிஸோபொலிஸ் நகரில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உணர்ச்சிவசப்பட்டவராக நெய்மர் காணப்பட்டார்.
தான் காயமடைந்தபோதிலும் இறைவனின் ஆசி காரணமாக சக்கர நாற்காலி மூலம் நடமாடும் நிலைக்குத் தள்ளப்படவில்லை எனவும் மெஸ்ஸி கூறினார்.
பிரேஸில் அணி இறுதிப்போட்டியில் விளையாடாவிட்டாலும் 3 ஆவது இடத்துக்கான போட்டியில் நெதர்லாந்தை வென்று தனது கௌரவத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் நெய்மர் கூறினார்.
இதேவேளை, உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் ஆர்ஜன்டினா அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பார்சிலோனா கால்பந்து கழக அணிக்காக விளையாடி வரும் நெய்மர், அதே அணியில் இடம்பெற்றுள்ள, அர்ஜென்டினா வீரர்களான மெஸ்ஸி மற்றும் ஜாவியர் மாஸ்கெர்னோவுக்கு தனது முழு ஆதரவை அளிப்பதாகத் தெரிவித்தார்.
மெஸ்ஸியும் தானும் வெவ்வேறு அணியில் இடம்பெற்றிருந்தாலும் சிறந்த நண்பர்கள் எனவும் நெய்மர் தெரிவித்துள்ளார்.
இறுதிப் போட்டியில் அர்ஜன்டினா அணி தனது சிறப்பான ஆட்டத்தால் சாம்பியன் பட்டத்தை வெல்லும் எனவும் நெய்மர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நெய்மர், கொலம்பியா அணிக்கு எதிரான உலகக் கிண்ண காலிறுதி போட்டியில், ஜூவான் சுனிகா இவர் மீது மோதியதில் நெய்மருக்கு முதுகெலும்பில் சிறிய முறிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply