ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸும், அகில இல ங்கை மக்கள் காங்கிரஸும் ஒன்றிணைந்து ஒரு
பொதுச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு கொள்கையளவில் இணக்கம்
கண்டுள்ளன.
ஊவா மாகாண சிவில் அமைப்புக்களின் முயற்சியால் இந்த கொள்கையளவிலான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
‘ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில
இலங்கை மக்கள் காங்கிரஸும் ஒன்றிணைந்து பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதை
கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் பொது செயலாளர் ஹசன் அலி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் உறுதி செய்துள்ளனர் .
இரு கட்சிகளின் தலைவர்களான அமைச்சர்கள்
ரவூப் ஹக்கீம் றிசாத் பதியுதீன் இருவரும் உம்ரா பயணம் மேற்கொண்டு சவூதி
அரேபியா பயணமாவதால் அவர்கள் நாடு திரும்பியதும் எதிர்வரும் 28ஆம் திகதி
இறுதி தீர்மானம் எட்டப்படும் என் அவர்கள் தெரிவித்துள்ளனர் .
No comments:
Post a Comment
Leave A Reply