சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு எதிரான வலைப்பின்னல் படிப்படியாக வலுவான முறையில் பின்னப்பட்டு வருவதாக பிரபல அரசியல் விமர்சகர் தயான் ஜயதிலக எச்சரித்துள்ளார்.
ஆனால் இலங்கை தொடர்ந்தும் சர்வதேசத்தை அலட்சியம் செய்து வரும் நிலையில் திடீரென்று ஒருநாள் பாரிய அழுத்தமொன்றை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையில் கடமையாற்றிய அமெரிக்கத் தூதுவர் நேரடியாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதித் தூதுவராக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மறுபுறத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளராக ஜோர்தான் இளவரசர் சஹீத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நேரடியாக விமர்சனம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று இலங்கையில் மதவாத பயங்கரவாதம் நிலவுவதாக பான் கீ மூன் தொடக்கம் தலாய் லாமா வரை விமர்சித்துள்ளார்கள்.
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் சர்வதேச மட்டத்தில் இலங்கையின் நற்பெயரைக் கெடுத்து விட்டன.
அயல் நாடான இந்தியாவை எடுத்துக் கொண்டால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா தனித் தமிழ் ஈழத்துக்கான வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்குமாறு நிர்ப்பந்தம் செய்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்களை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்தனி விடயங்களாக கருதிக் கொள்ளக் கூடாது. அனைத்தும் ஒரு வலைப்பின்னலின் சமாந்திர செயற்பாடுகள் தான்.
இவற்றை இலங்கை அலட்சியம் செய்யும் பட்சத்தில் அரசியல் ரீதியாக ஒரு முள்ளிவாய்க்காலை இலங்கை சந்திக்க வேண்டி வரும் என்றும் தயான் ஜயதிலக்க எச்சரித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, July 14, 2014
இலங்கைக்கு எதிரான சர்வதேச வலைப்பின்னல்:தயான் ஜயதிலக…!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இவர் பெயர் டேம்மிட்சல் வடநாட்டை சார்ந்தவர். இவர் ஒருநாள் சாலை ஓரம் நடந்து சென்றபோது சாலையோரம் ஒரு மலைபாம்பு அடிபட்டு கிடந்ததை கண்டார்.
-
தானே,குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, நண்பனின் மனைவியை கற்பழித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மயக்க மருந்து ...
-
ஜனாதிபதி மாளிகையிலிருந்த மெக்கோ கிளிகளை காணவில்லை கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் வளர்க்கப்பட்டு வந்த மெக்கோ ரக க...
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
No comments:
Post a Comment
Leave A Reply