ஜப்பான் பாராளுமன்ற லீக் உறுப்பினர்கள் இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர் என ஜப்பானிலுள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.பாராளுமன்ற லீக் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் அட்மிரல் வஸந்த கரன்னகொட சந்தித்து உரையாற்றியபோதே அவர்களது விஜயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ள இக் குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர்.மேலும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்- பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்- சூழல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ஆகியோரையும் இக்குழுவினர் சந்திக்கவுள்ளனர்.
ஜப்பான் பிரதிநிதிகள் குழுவிற்கு அந்நாட்டு பாராளுமன்ற லீக்கின் தலைவரும் ஆளும் முற்போக்கு ஜனநாயக கட்சியின் பிரதி ஜனாதிபதியுமான மஷிக்கோ கொமுரா- செயலாளர் நாயகம் யுக்கோ ஒபியுச்சி முன்னாள் பாராளுமன்ற அமைச்சரும் சிரேஷ்ட நிதித்திட்டமிடல் அமைச்சர் உட்பட 12 அரசியல் தலைவர்கள் இக்குழுவில் அடங்குகின்றனர்.
ஆளும் முற்போக்கு கட்சி- மற்றும் ஏனைய கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 67 உறுப்பினர்கள் ஜப்பான்- இலங்கை பாராளுமன்ற லீக்கில் அங்கம் வகிக்கின்றனர். இலங்கை- ஜப்பான் பாராளுமன்ற லீக்கின் தலைவராக சூழல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் பதவி வகிக்கிறார்.
12 வருடங்களுக்குப் பின்னர் லீக் இலங்கை வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இருநாடுகளுக்கிடையிலான உறவை மேலும் பலப்படுத்தக்கூடியதாக இவ்விஜயம் அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
Leave A Reply