blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, July 14, 2014

தேயிலைத் தூளில் கலந்து தங்கம் கடத்திய இரு இலங்கையர்கள் கைது…!!

1220995931Untitled-1தேயிலைத் தூளில் கலந்து நூதனமுறையில் தங்கம் கடத்திய இரு இலங்கையர்கள் உட்பட மூவர் தமிழகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக இந்திய மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதில் லண்டனில் இருந்து நேற்று சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த திருச்சியைச் சேர்ந்த ராமன் (வயது 41) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அவரிடம் 2 சூட்கேஸ்கள் இருந்தன. அவற்றை திறந்து பார்த்த போது 2 சூட்கேஸ்களிலும் துணிகளுக்கு அடியில் 50 தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது.

2 சூட்கேஸ்களில் இருந்தும் தலா 100 கிராம் எடைகொண்ட 5 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1½ கோடி (இந்திய ரூபாய்) ஆகும்.

இது தொடர்பாக ராமனை கைது செய்தனர்.

இதேபோல கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் இலங்கையைச் சேர்ந்த முகமது (31), காசிம் (32) இருவரும் சுற்றுலா விசாவில் வந்தனர்.

அவர்களது உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்களிடம் ஏராளமான தேயிலைத்தூள் பாக்கெட்டுகள் இருந்தன.

இலங்கையில் தரமான தேயிலை கிடைப்பதால் வாங்கி வந்ததாக அவர்கள் கூறினர். ஆனாலும் அதிகாரிகள் அந்த தேயிலைத்தூளை சோதனை செய்த போது, 2 பேரும் தலா 1½ கிலோ தங்கத்தை பொடியாக்கி அதில் கலந்து நூதன முறையில் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.90 இலட்சம் மதிப்புள்ள 3 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைதான இலங்கை இளைஞர்கள் உள்பட 3 பேரிடமும், அந்த தங்கத்தை யாருக்காக கடத்தி வந்தனர் என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என மாலை மலர் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►