முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 10 அம்சங்களை உள்ளடக்கிய கொள்கைத்திட்டத்துடன் அரசியலில் மீண்டும் நுழைய உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.கொழும்பு ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதுடன், சந்திரிக்கா இது குறித்து விரைவில் அறிவிப்பை வெளியிடுவார் எனவும் குறிப் பிட்டுள்ளது.
அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புகிறாரா என்பது தெரியாது, ஆனால் அவர் இரு பிரதான கட்சிகளினது பிரமுகர்களுடனும் இது குறித்து ஆராய்ந்துள்ளார்,
தற்போதைய அரசு குறித்து அதிருப்தியிலிருக்கும் பல மூத்த அமைச்சர்களுடனும் அவர் இது குறித்து பேசியுள்ளார் என்றும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply