blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, July 14, 2014

நவீனமயப்படுத்தப்பட்ட சுதந்திர சதுக்க வளாகம் ஜனாதிபதியினால் திறந்துவைப்பு

நவீன முறையில் புனரமைக்கப்பட்ட கொழும்பு சுதந்திர சதுக்க பிரதேசம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று (ஜூலை 13) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. 

சுதந்திர சதுக்கமும் அதனை அண்டிய பிரதேசங்களும் 55 கோடி ரூபாய் செலவில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் எழில்மிகு பிரதேசமாக புனரமைக்கப்பட்டுள்ளன. இந் நிகழ்வில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ அவர்களும் கலந்துகொண்டார்.

இந்த அபிவிருத்தி திட்டத்தில் உள்ளடங்கும் அரச கட்டடங்கள் மற்றும் வர்த்தக தொகுதிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று மக்கள் உபயோகத்திற்காக கையளித்தார். 

அரச கணக்காய்வாளர் திணைக்கள கட்டடம். மாகாண சபை கட்டடம். இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள கட்டடம் என்பன இந்த அபிவிருத்தி திட்டத்தில் உள்ளடங்குகின்றன.

40 பாரிய வர்த்தக நிலையங்களைக் கொண்ட அதிநவீன வர்த்தக கட்டடத் தொகுதி நவீன வசதிகளுடனான சினிமா திரையரங்கு என்பனவும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை நினைவு கூரும் பல நிகழ்ச்சிகளும் நேற்றைய நிகழ்வில் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் ஜீ. எல். பீரிஸ், எஸ். பி. திஸாநாயக்க, மைத்ரிபால சிறிசேன உட்பட பல அமைச்சர்கள், பிரதம நீதவான் மொஹான் பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் திரு.லலித் வீரதுங்க, மேல் மாகாண முதலமைச்சர் பிரஸன்ன ரனதுங்க, பிரதியமைச்சர்கள், இராஜதந்திரிகள், முப்படை அதிகாரிகளின் பிரதானி, இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►