blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, July 14, 2014

நிறைவேறியது ஜேர்மனியின் கனவு

16857792521உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஆஜண்ரினாவை 1-0 என வீழ்த்தி ஜேர்மனி சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது.
24 ஆண்டுகளுக்கு பிறகு ஜேர்மனி இந்தப் பட்டத்தை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டத்தின், உபரி நேரத்தின் 23 ஆவது நிமிடத்தில், ஜேர்மனியின் கோயட்ஸ் ஒரு கோல் அடித்து, தமது அணியின் வெற்றிக்கு வழிசமைத்தார்.

இந்த கோல் ஆட்டத்தின் 113 ஆவது நிமிடத்தில் வந்தது.

லியோனல் மெஸ்ஸி மிகவும் சிறப்பாக ஆடினாலும், ஜேர்மனியின் எதிர்த் தாக்குதலை ஆஜண்டினாவால் சமாளிக்க முடியவில்லை.

இந்த இறுதி ஆட்டத்தை கண்டுகளிக்க ஜேர்மனியின் அரச தலைவி ஏங்கலா மெர்க்கல் ரியோ டி ஜெனீரோவின் மேரக்கானா அரங்கத்துக்கு வந்திருந்தார்.
531617709
கடந்த ஒரு மாதமாக நடைபெற்றுவந்த உலகக் கிண்ண கால்பந்து திருவிழா முடிவுக்கு வந்துள்ளது.

அடுத்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ளது.

இந்த உலகக் கிண்ணத்தில் மொத்தமாக 171 கோல்கள் அடிக்கப்பட்டன.

world_cup6

சிறந்த கோல் கீப்பராக ஜேர்மனியின் மனுவேல் நோயரும். போட்டியின் மிகச்சிறந்த விளையாட்டு வீரராக ஆஜண்டினாவின் லியோனல் மெஸ்ஸியும் தேர்தெடுக்கப்பட்டனர்.

அதிக கோல் அடித்தவருக்கான தங்கக் காலணி விருதான ´கோல்டன் பூட்ஸ்´ விருது கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிகஸுக்கு வழங்கப்பட்டது.
world_cup4
தென் அமெரிக்காவில் ஒரு ஐரோப்பிய அணி, உலகக் கிண்ணப் போட்டியை வெல்வது இதுவே முதல் முறை ஆகும் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►