காஸா விவகாரத்தில் சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் கொண்டு வந்த தீர்மானத்துக்கு 29 நாடுகள் ஆரதவு தெரிவித்துள்ளன.
அமெரிக்கா மட்டும் எதிராக வாக்களித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அப்பாவிப் பொதுமக்கள் உள்ளிட்ட 680 பலஸ்தீனியர்கள் மற்றும் 31 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்தினர் சமாதான உடன்படிக்கை மேற்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், சர்வதேச விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் நேற்றுமுன்தினம் தீர்மானம் கொண்டு வந்தது.
47 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இந்த தீர்மானத்துக்கு 29 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா மட்டும் எதிராக வாக்களித்துள்ளது.
இந்த வாக்கெடுப்பில் 17 நாடுகள் கலந்து கொள்ளவில்லை. தீர்மானம் நிறைவேறியதன் மூலம் காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல் குறித்து விசாரணை விரைவில் நடைபெறும் என்று ஐ.நா. அறிவித்திருக்கிறது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, July 24, 2014
காஸா மீது இஸ்ரேலின் கண்மூடித்தன தாக்குதல் சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. சபை முடிவு!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
இப்பரீட்சை பரீட்சை திணைக்களத்தினால் சிங்களம்,தமிழ் ஆகிய மொழிகள் மூலம் 2014.08.09 ஆம் திகதி நடாத்தப்படும்.
-
பிரான்ஸில் 14 வயதே ஆன சிறுமி ஒருவர் தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விழுப்புரத்தில் இருந்து சேலம் நோக்கி நேற்று காலை வந்துகொண்டிருந்த தனியார் பஸ், அம்மாபேட்டை அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது...
No comments:
Post a Comment
Leave A Reply