blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, July 25, 2014

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் 2014; பதக்கப் பட்டியலில் இங்கிலாந்து முன்னணியில்


பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் 2014; பதக்கப் பட்டியலில்  இங்கிலாந்து முன்னணியில்20 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் விழாவில் இரண்டாவது நாளுக்குரிய போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன.


நேற்றைய முதல் நாள் போட்டிக்காக அரங்க சைக்கிளோட்டம், ஜிம்னாஸ்டிக், ஜூடோ, நீச்சல், பளுதூக்கல், ஆகிய விளையாட்டுக்களுடன் மூவம்ச போட்டிகள் தங்கப் பதக்கப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.

முதல் நாள் போட்டிகளில் 4 புதிய சாதனைகள் படைக்கப்பட்டதுடன் இரண்டு சாதனைகள் புதுப்பிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் பளுதூக்கல் போட்டியில் முதலாவது தங்கத்தை இந்தியா வென்றெடுத்தது.

பளுதூக்கலில் மணிப்பூர் வீராங்கனையான சஞ்சிதா சானு, 48 கிலோகிராம்  எடைப்பிரிவில், 173 கில கிராம் பளுதூக்கல் மூலம் அவர் தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

இதேபிரிவில், மற்றுமொரு இந்திய வீராங்கனையான மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கத்தை வென்றெடுத்தார்.

இந்தப் போட்டியில் களமிறங்கிய இலங்கை வீராங்கனையான சத்துரி வர்ணகுலசூரிய போட்டியில் பிரகாசிக்கத் தவறினார்.

இதேவேளை டோல் க்ரொஸ்ஸில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் மகளிருக்கான 400 மீற்றர் போட்டியில் ஸ்கொட்லாந்தின் ஹேனா மிலி தங்கபதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

இதற்காக இவர் 4 நிமிடங்களும் 31.7 6 செக்கன்களை எடுத்துக்கொண்டார்.
வெள்ளிப்பதக்கத்தை இங்கிலாந்து அணியும் வெண்கலப்பதக்கத்தை அவுஸ்திரேலியாவும் சுவீகரித்துள்ள்ளன.

மற்றுமாரு நீச்சல் போட்டியில் 200 மீற்றருக்கான போட்டிப்பிரிவில் புதிய சாதனையுடன் அவுஸ்திரேலியாவின் ஏமா மெக்கியோன் தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

இதன்பிரகாரம் 6 தங்கப்பதக்கங்கள் உள்ளிட்ட 17 பதக்கங்களுடன் இங்கிலாந்து முதல் இடத்திலுள்ளது.

அவுஸ்திரேலியா ஐந்து தங்கப்பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும் ஸ்கொட்லாந்து நான்கு தங்கங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►