அவுஸ்திரேலிய
அதிகாரிகளால் 41 புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு திருப்பி
அனுப்பப்பட்டதை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை விமர்ச்சித்துள்ளது.குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பத்தை முன்வைப்பதற்கு போதுமான கால அவகாசம் வழங்கப்படவில்லை எனவும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடுக்கடலில் வைத்தே புகலிடக் கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் கவலைக்குரியது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை. 153 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களையும் திருப்பியனுப்புவதை தடுக்கும் வகையில் அவுஸ்திரேலிய நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை ஐ.நா மனித உரிமைகள் பேரவை வரவேற்றுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply