களுத்துறை வடக்கு, புன்சிறிபுர பிரதேசத்திலுள்ள விவசாயி ஒருவர் அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளின் முன்னிலையில் தாக்கப்பட்டு கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவமொன்று நடந்துள்ளது.
கல்பான, வெல்பொல, புன்சிறிபுர பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதான ஆனந்த பிரேமலால் திசாநாயக்க எனும் விவசாயியே நேற்றிரவு இவ்வாறு கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
சந்தேகநபரான 28 வயதுடைய துசித அல்விஸ் அப் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் ஒளிந்திருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் விவசாயியின் மனைவியிடம் கடந்த ஏப்ரல் மாதம் ஆயிரம் ரூபாவை கடனாக வாங்கியிருக்கிறார்.
அதைத் திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்ததால் விவசாயி அவரைப் பல தடவைகள் ஏசியிருக்கிறார்.
இந்நிலையில் நேற்றிரவு மதுபோதையுடன் விவசாயியின் வீட்டுக்கு வந்த சந்தேகநபர் விவசாயியுடனும் அவரது மனைவியுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் விவசாயியைத் தாக்கியபின் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்பான வைத்தியசாலையில் இன்று காலை வைக்கப்பட்டிருந்தது.
களுத்துறை பிரதம நீதிவான் அஜித் மாசிங்க, நீதிவான் மரண விசாரணையை நடத்தியபின் பிரேத பரிசோதனையை நடத்துவதற்கு சடலத்தை நாகொட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.
களுத்துறை வடக்கு பொலிஸ் பொறுப்பதிகாரி பிரஷாத் சில்வாவின் தலைமையில் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக புலன் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, July 22, 2014
மனைவி, பிள்ளைகள் முன்னிலையில் குடும்பஸ்தர் கழுத்து நெரித்துக் கொலை
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
இப்பரீட்சை பரீட்சை திணைக்களத்தினால் சிங்களம்,தமிழ் ஆகிய மொழிகள் மூலம் 2014.08.09 ஆம் திகதி நடாத்தப்படும்.
-
பிரான்ஸில் 14 வயதே ஆன சிறுமி ஒருவர் தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விழுப்புரத்தில் இருந்து சேலம் நோக்கி நேற்று காலை வந்துகொண்டிருந்த தனியார் பஸ், அம்மாபேட்டை அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது...
No comments:
Post a Comment
Leave A Reply