ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தான் பதவி கவிழ்க்கப்படலாம் என்ற அச்சத்தில் சிக்கியிருக்கிறார் எனவும் இதன் காரணமாக அதிகாரத்தின் மீதான தனது பிடியை இறுக்கமாக்கிக் கொள்வதற்காக அவர் மக்களை மௌனமாக்க முயல்கிறார் எனவும் மனித உரிமை பணியாளர்கள் மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அரச அமைச்சர் ஆகியோரை மேற்கோள் காட்டி ஏ.எவ்.பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
சமீபத்தில் அரசசார்பற்ற அமைப்புகளுக்கு எதிராக விடுக்கப்பட்ட உத்தரவுக்கு இந்த அச்சமே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை கருத்திற்கொண்டே தனக்கு எதிரான குரல்களை மௌனமாக்க முயல்வதாக அரசசார்பற்ற அமைப்புகளின் பணியாளாகள் தெரிவித்துள்ளனர்.
நாடு ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் வேளையில் அரசு தனது நிலை ஆட்டம் காண்பதாக உணர்கிறது, அதன் காரணமாகவே அரசசார்பற்ற அமைப்புகளுக்கு எதிரான உத்தரவு வெளியானது என ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவதற்காக யு.எஸ்.எயிட் நிறுவனம் முன்னெடுக்க இருந்த திட்டம் காரணமாக அரசு கடும் அச்சமடைந்தது.
ஆட்சி மாற்றத்திற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என அரசில் உள்ள சிலர் அச்சமடைந்துள்ளனர் என பெயர் குறிப்பிட விரும்பாத அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். - இவ்வாறு ஏ.எவ்.பி செய்திச் சேவை மேலும் தெரிவித்துள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, July 22, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
இப்பரீட்சை பரீட்சை திணைக்களத்தினால் சிங்களம்,தமிழ் ஆகிய மொழிகள் மூலம் 2014.08.09 ஆம் திகதி நடாத்தப்படும்.
-
பிரான்ஸில் 14 வயதே ஆன சிறுமி ஒருவர் தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விழுப்புரத்தில் இருந்து சேலம் நோக்கி நேற்று காலை வந்துகொண்டிருந்த தனியார் பஸ், அம்மாபேட்டை அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது...
No comments:
Post a Comment
Leave A Reply