blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, July 5, 2014

காணாமற்போனோர் தொடர்பில் முல்லைத்தீவில் சாட்சிப் பதிவு

காணாமற்போனோர் தொடர்பில் முல்லைத்தீவில் சாட்சிப் பதிவுகாணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குவின் ஐந்தாவது பகிரங்க அமர்வு முல்லைத்தீவில் இன்று ஆரம்பமானது.


இன்று முற்பகல் 9 மணியளவில் ஆரம்பமான சாட்சி விசாரணைகளில் இதுவரை 9 பேரிடம் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்தார்.


இன்றைய சாட்சி விசாரணைகளுக்காக 60 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், 21 பேர் மாத்திர​மே சமூகமளித்திருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

மேலும் 150 பேர் இன்றைய தினம் புதிதாக முறைபாடுகளை முன்வைத்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இடம்பெறுகின்ற அமர்வில், புதுக்குடியிருப்பு கிழக்கு மற்றும் புதுக்குடியிருப்பு மேற்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் சாட்சி விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனைத்தவிர, கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலும் சாட்சி பதிவுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் ஆரம்பமாகியுள்ள பகிரங்க அமர்வுகள் இன்று முதல் 03 நாட்களுக்கு இடம்பெறவுள்ளன.

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு  ஏற்கனவே  முல்லைத்தீவு மாவட்டத்தில் தமது அமர்வுகளை நடத்தியிருந்தது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு உள்ளிட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆணைக்குழு ஏற்கனவே தமது அமர்வுகளை நடத்தி சாட்சியங்களை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►