
13 நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ராணுவ நடவடிக்கைகள் காரணமாக பாலஸ்தீன மக்களுக்கே அதிகளவிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா நகரத்திற்கு கிழக்கே உள்ள பிரதேசத்தில் மாத்திரம் 40 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பேன் கீ மூன் பாலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அப்பாஸை சந்திக்கும் நோக்கில் பின்னர் விஜயம் செய்யவுள்ளார்.
பாலஸ்தீன – இஸ்ரேலுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த இரத்த களரியை தடுக்கும் நோக்கிலேயே பேன் கீ மூனின் விஜயம் அமைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்..
இந்தநிலையில், இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் 395 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply