blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, July 3, 2014

மேல் மாகாணத்தில் மீண்டும் மூன்று நாட்களுக்கு டெங்கு ஒழிப்புத் திட்டம்


மேல் மாகாணத்தில் மீண்டும் மூன்று நாட்களுக்கு டெங்கு ஒழிப்புத் திட்டம்மேல் மாகாணத்தில் இன்று முதல் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு மீண்டும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.


டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் மக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதே இந்த நடவடிக்கையின் ஊடாக எதிர்பார்த்துள்ளதாக அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பபா பலிஹவடன சுட்டிக்காட்டுகின்றார்.

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், கொழும்பு கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் கூறினார்.

கொழும்பு மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிக வீடுகளில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள எண்ணியுள்ளதுடன், அதிக அபாயம் நிலவும் சுகாதார பிரிவுகளை தெரிவு செய்து சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதன் பிரகாரம் கொழும்பு மாவட்டத்தில் 11 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும், கொழும்பு மாநகர சபை பிரிவுக்குட்பட்ட 5 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

வீடு வீடாகச் சென்று டெங்கு தொடர்பில் மக்களை தெளிவூட்டுவதுடன், அவர்களின் ஊடாகவே சூழலை சுத்தப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 50 டெங்கு காய்ச்சல் நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவிக்கின்றார்.

17,500 க்கும் அதிக டெங்கு காய்ச்சல் நோயாளர்கள் இதுவரையில் நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ளதுடன், 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த 5 வருடங்களாக ஜூலை மாதத்திலேயே அதிக டெங்கு காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகுவதுடன், ஜூன் மாதம் வாராந்தம் ஆயிரத்து 500 நோயாளர்கள் பதிவாகியதாக பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

மழையுடன் கூடிய வானிலை நிலவுகின்றமையால், டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பபா பலிஹவடன
மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►