blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, July 3, 2014

ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் 3 மாணவர்கள் கைது

ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் 3 மாணவர்கள் கைதுரஜரட்டை பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை தடுத்து வைத்து, அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்ட மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் 34 மாணவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன  தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் 10 விரிவுரையாளர்களை 24 மணித்தியாலங்களாக மாணவர்கள் தடுத்து வைத்திருந்ததுடன், அவர்களை தாக்குவதற்கும் முற்பட்டதாகவும் மிஹிந்தலை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் ​தெரிவிக்கின்றனர்.

அதன் பிரகாரம் இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்ட 38 மாணவர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சபையினால் பொலிஸாரிடம் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த மாணவர்களை நேற்றைய தினம் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் வருகை தராதமையால், மாணவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, இன்று மாலை 4 மணிக்கு முன்னர் பல்கலைக்கழக வளாகத்திலிருந்தும், விடுதிகளிலிருந்தும் மாணவர்கள் வெளியேற வேண்டும் என ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரஞ்ஜித் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்றைய செயற்குழு கூட்டத்தின் போது பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் உபவேந்தர் கூறினார்.

இந்த நிலைமை வழமைக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பல்கலைக்கழகம் திறக்கப்படும் எனவும் உபவேந்தர் பேராசிரியர் ரஞ்ஜித் விஜேவர்தன சுட்டிக்காட்டினார்.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தை தவிர ஏனைய அனைத்து பீடங்களும் நேற்று நண்பகல் முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►