blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, July 8, 2014

முதலாவது அரையிறுதி இன்று; நெய்மர் இல்லாவிட்டாலும் வெற்றிபெருவோம் - பிரேஸில் பயிற்றுவிப்பாளர்

முதலாவது அரையிறுதி இன்று; நெய்மர் இல்லாவிட்டாலும் வெற்றிபெருவோம் என்கிறார் பிரேஸில் பயிற்றுவிப்பாளர்
உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளின் அரையிறுதிச் சுற்றில் நட்சத்திர வீரர் நெய்மர் விளையாடாவிட்டாலும் தமது அணி எதிரணியை வெற்றிகொள்ளும் பலத்தினை பெற்றிருப்பதாக பிரேஸில் அணியின் பயிற்றுவிப்பாளர் லுயிஸ் ஸ்கோலரி தெரவித்துள்ளார்.

நெய்மர் தனது பங்கினை நிறைவு செய்துள்ளதாகவும், இனி அணி வீரர்கள் தமக்கான பங்கினை நிறைவுசெய்ய வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெய்மரின் இழப்பை தமது அணி உணர்வதாகவும் இருப்பினும், போட்டிகளில் அவதானம் செலுத்தி முன்னேறிச் செல்வதே தமது இலக்கு எனவும் பிரேஸில் அணியின் பயிற்றுவிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரேஸில் அணி அரையிறுதி வரை முன்னேற பிரதான பங்காற்றிய நெய்மருக்காக கிண்ணத்தை வெற்றி கொள்ள பிரேஸில் அனைத்து முயற்சிகளையும் செய்யும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை 200 மில்லியன் மக்களின் ஆதரவுடன் பிரேஸிலில் விளையாடுவது அவர்களுக்கு புதியதொரு உத்வேகத்தை அளிக்கும் என
ஜேர்மன் அணியின் பயிற்றுவிப்பாளர் ஜோச்சிம் லோ தெரிவித்துள்ளார்.

இது தமது அணிக்கு கடும் சவாலாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மன் அணியின் ஒவ்வொரு வீரரும் தமது பொறுப்பினை உணர்நது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென ஜேர்மன் அணியின் பயிற்றுவிப்பாளர் அணி வீரர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் ஜேர்மன் மற்றும் பிரேஸில் அணிகள் இன்று மோதவுள்ளன.

இந்தப் போட்டி இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 1.30 மணிக்கு பெலோ ஹொரிஸண்டேயில் நடைபெறவுள்ளது.

அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►