அரசியல் வாதிகளும் பல ஊடகவியலார்களும்
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவுக்கும் தீவிரவாத அமைப்பான பொது பல
சேனாவுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.
பொது பல சேனா அமைப்பு இன, மதவாத வெறியை
தூண்டி வருகின்றனது அந்த அமைப்பு மேற்கொள்ளும் விசமத்தமனான பிரசாரம்தான்
அலுத்கம பேருவளை முஸ்லிம்கள் மீதான வன்முறைக்கு காரணம் எனவும்
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது
, ஆளும் தரப்பிலும் எதிர் தரப்பிலும் உள்ள பெளத்தமத அரசியல்வாதிகள் ,
அமைச்சர்கள கூட இந்த குற்றசாட்டை முன்வைகின்றார்கள் . ஆனால் குற்றம்
சாட்டப் படும் முக்கிய நபர்களை அரசாங்கள் கைது செய்யவில்லை .
அண்மையில் சிங்கள மொழி பிரதான தேசிய
பத்திரிகையான ராவய பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரும், தற்போதையா
இயக்குனருமான விக்டர் ஐவன் எழுதியுள்ள கட்டுரை ஒன்றிலும் பாதுகாப்புச்
செயலாளர் கோதபாய ராஜபக்ஷவுக்கும் தீவிரவாத அமைப்பான பொது பல சேனாவுக்கும்
இடையில் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் .
அதற்கு துணையாக சில
சம்பவங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட
அத்தே ஞானசார தேரரின் துணிவுக்கு காரணம் பாதுகாப்பு செயலாளருடன் உள்ள
தொடர்புதான் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .
பாதுகாப்புச் செயலாளர் சில தீவிரவாத
சக்திகளுக்கு பாலூட்டி பெரியவர்களாகும் வரை வளர்த்ததோடு நின்றுவிடாது
அவற்றுக்கு பாதுகாப்பும் வழங்கினார். பொதுபல சேனா அமைப்பு இதற்கான
சிறந்ததொரு உதாரணமாகும். எனவும் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார் .
தீவிரவாத அமைப்பான பொது பல சேனாவுக்கும்
அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவுக்கும் இடையில் உள்ள
தொடர்பு பற்றி பல மான சர்ச்சைகள் உருவாகிவரும் நிலையில் .
ஆங்கில பத்திரிகை
ஒன்றில் செவ்வியில் அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய
ராஜபக்ஷ அந்த குற்றசாட்டுக்களை மறுத்துள்ளார் மறுத்துள்ளார் .
அவர் வழங்கியுள்ள செவ்வியில் இருந்து சில பகுதிகள :
பொதுபல சேனா இயக்கத்துடன், தமக்கு தொடர்பு
இருப்பதாக சில தரப்பினர் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை
என அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுபல சேனா இயக்கத்துடன் எந்தவிதமான
தொடர்புகளும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள
குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என அவர் தெரிவித்துள்ளார்.சில முஸ்லிம்
மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தம்மை குற்றவாளியாக்குவதில் தீவிரம்
காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.சில ஊடகங்களும் தமக்கு எதிராக
குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்ற போதிலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும்
கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
சில ஊடகவியலாளர்கள் அடிப்படையற்ற பத்திகள்
மற்றும் செய்தி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றமை துரதிஸ்டவசமானது என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார். போரை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் சமாதானத்தை
ஏற்படுத்திய விடயங்களில் தமக்கு அதிகமான பங்கு உள்ளது. இந்தநிலையில்
நாட்டில் ஒன்று வன்முறை ஏற்படுவது நாட்டின் கீர்த்தியை பாதிக்கும் என்பதை
தாம் மறுக்கவியலாது. இதனடைப்படையில் தான் தாம் அளுத்கம சம்பவத்தை
பார்ப்பதாக கோத்தபாய குறிப்பிட்டார்.
மாத்தறையில் பொது பல சேனாவின் அலுவலகத்தை
தாம் திறந்து வைத்தமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கிய
அவர், மரியாதைக்குரிய பிக்குவான க்ராமா விமலஜோதி அழைப்பு விடுத்தமை
காரணமாகவே தாம் அதனை திறந்து வைத்ததாக விமலஜோதி தேரர் இலங்கையின்
எதிர்க்கட்சி தலைவர் உட்பட்ட பலருக்கும் பரிச்சயமானவராவார் என்றும்
கோத்தபாய தெரிவித்தார்.
அளுத்கம வன்முறைகளின் போது பொலிஸார்
உரியவகையில் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்த அவர், அனைவரும்
பொதுமக்கள் விடயத்தில் பொலிஸார் வேறுபட்ட விதத்தில் நடந்து கொள்ள வேண்டும்
என்று எதிர்பார்க்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய ராயப்பு
ஜோசப் நாட்டுக்கு எதிராகவும் சமூகங்களுக்கு எதிராகவும் பேசுகிறார். எனினும்
யாரும் அவரை கைதுசெய்ய கோருவதில்லை. முஸ்லிம் தலைவர்களும் அதே வழியை
பின்பற்றுகின்றனர் என்றும் கோத்தபாய குற்றம் சுமத்தினார்.
வெறுப்பை ஏற்படுத்துபவர்கள் மீது பயங்கரவாத
தடை சட்டத்துக்கு கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டாலும்,
வெறுப்பு பேச்சு எது என வரையறுக்க முடியாது அதில் சட்ட சிக்கல்கள்
இருபதாகவும் நாளாந்தம் நடக்கும் போராட்டங்களை, அதனைக்கொண்டு தடுக்க
முடியாது.
எனவே பொலிஸாரை குறை கூறுவது பொருத்தமற்றது என்றும் அவர்
குறிப்பிட்டார்.
எனினும் வெறுப்பூட்டும் பேரணிகளை
தடுக்காமல் விட்டமையானது பாதுகாப்பு குறைபாடு என்பதை ஏற்றுக்கொள்ள முடியும்
என்று அவர் கூறினார். அதேநேரம் அளுத்கமவில் வன்முறைகளுக்கு காரணம் என்று
கூறப்படும் பௌத்த பிக்கு தாக்கப்பட்ட சம்பவம் உண்மையானது என்றும் அவர்
தெரிவித்தார்.
மருத்துவ அறிக்கையில் குறித்த பௌத்த பிக்கு
தாக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவித்த
கோத்தபாய, உடல் ரீதியாக சேதங்கள் ஏற்பட்டால் மாத்திரமே மருத்துவ அறிக்கை
அதனை காட்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அளுத்கம சம்பவம் திட்டமிடப்பட்ட சம்பவம்
என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளமையானது தரமற்ற அரசியல்
என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அரசியலில் ஈடுபடப் போவதில்லை என
குறிப்பிட முடியாது எனவும், ஜனாதிபதி அழைத்தால் அரசியலில்
களமிறங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது பதவி வகிக்கும் பல அரசியல்வாதிகளை
விடவும் தரமான சேவையை நாட்டுக்கு தம்மால் ஆற்ற முடியும் என்பதனை
உறுதியிட்டு கூற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply