12 நிறுவனங்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
சிறிய அளவிலான சமூக அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் நிறுவனங்களுக்கான காசோலைகளை இலங்கைக்கான பதில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சொன்யா கொப்பே கையளித்தார்.
வருடாந்தம் சிறிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவியளிக்கும் அவுஸ்திரேலியாவின் நேரடித் திட்டத்தின் கீழ் இக்காசோலை வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் உடனடி நிவாரணத்தை வழங்கும் உள்ளூர் சமூகக் குழுவினருக்கு இந்த நிதியுதவி கிடைத்துள்ளது.
மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு உதவும் வகையில் நேரடி உதவித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இலங்கையில் தமது வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாத குறைந்த வசதிகளைக் கொண்ட நூற்றுக்கணக்கான மக்களுக்கு உதவிகளைச் செய்து வருவதாக இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான பதில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சொன்யா கொப்பே கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவுஸ்திரேலியா வழங்கிவரும் நேரடி உதவிகள் குறித்து பெருமையடைவதுடன் அடிமட்டத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப அவுஸ்திரேலியா தொடர்ந்தும் உதவும் என்றும் அவர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment
Leave A Reply