புதிய கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா
இன்று (01) தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதுடன் ஓய்வு பெற்றுச் செல்லும்
அட்மிரல் ஜயனாத் கொலம்பகே பிரியாவிடைப் பெற்றுச் செல்லவுள்ளார்.
இதற்கான பிரதான நிகழ்வு கொழும்பிலுள்ள கடற்படைத் தலைமையகத்தில் இன்று மிகவும் கோலாகலமாக இடம்பெறவுள்ளது.
ஆரம்பமாக
தற்போதைய கடற்படைத் தளபதியான அட்மிரல் ஜயனாத் கொலம்பகே கடற்படைத்
தளபதிக்குரிய சம்பிரதாய வாளை புதிய தளபதியிடம் உத்தியோகபூர்வமாக
கையளிக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து ஒய்வு பெற்றுச் செல்லும் கடற்படைத்
தளபதி அட்மிரல் ஜயனாத் கொலம்பகேக்கான விசேட பிரியாவிடை மரியாதை அணிவகுப்பு
நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து இலங்கையின் 19 வது
கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா தனது கடமைகளை
பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார். இந்நிகழ்வில் கடற்படையின் பிராந்திய
கட்டளைத் தளபதிகள் உட்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, July 1, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
காலி – கிங்தோட்டை பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநதியாக, அவரது சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ சீனாவுக்கு விஜயம் செய்துள்ள...
-
இஸ்லாமாபாத்,பாகிஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்ட விமானப்படைக்கு சொந்தமான விமானம் நொறுங்கி விழுந்ததில் 2 விமானிகள் இறந்தனர். தலைநகர் இஸ்லாமா...
-
"மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக வருவதற்கு சட்டம் இடமளிக்காது" - இவ்வாறு முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெ...
No comments:
Post a Comment
Leave A Reply