
வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு உள்ளிட்ட அநேகமான பகுதிகளில் உள்ள சந்தைகளில் ஒருசில மரக்கறி வகைகளின் விலைகள் பன் மடங்கு அதிகரித்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளதால் நுகர்வோர் மாத்திரமின்றி வர்த்தகர்களும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
திருகோணமலை சந்தையில் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாயின் விலை 900 ரூபா வரை அதிகரித்துள்ளது.
வடமேல் மாகாணத்திலுள்ள சந்தைகளிலும் மரக்கறி வகைகளின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளன.
மலையகத்திலுள்ள சந்தைகளிலும் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி ஆகியவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
Leave A Reply