blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, July 8, 2014

புகலிடக் கோரிக்கையாளர்களை கடலிலேயே வைத்து திருப்பி அனுப்புதல் சட்டவிரோதமானதல்ல

புகலிடக் கோரிக்கையாளர்களை கடலிலேயே வைத்து திருப்பி அனுப்புதல் சட்டவிரோதமானதல்ல புகலிடக் கோரிக்கையாளர்களை கடலிலேயே வைத்து திருப்பி அனுப்பி வைக்கும் நடவடிக்கையானது சட்டவிரோதமானதல்ல அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் தெரிவித்துள்ளார். சர்வதேச சட்ட விதிகளுக்கு அமைவான முறையில்; புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோர முற்பட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் கடலில் வைத்தே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.இந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.எதிர்க்கட்சிகள் மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட தரப்பினர் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.

எனினும், கடலில் வைத்தே புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வைக்கும் நடவடிக்கையானது சட்ட ரீதியானது எனவும் இதில் எந்தவிதமான சட்ட மீறல்களும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் குறிப்பாக கிறீன் கட்சி அரசாங்கத்தின் கொள்கைகளை குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியா நொக்கி சட்டவிரோதமான முறையில் படையெடுக்கும் படகுகளை தடுப்பதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடல் வழியாக புகலிடக் கோரிக்கையாளர்கள் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் வரையில் கடலில் மரணங்கள் இடம்பெறுவதனை தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

153 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதனை தடுத்து நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டமை குறித்து கருத்து எதனையும் வெளியிட முடியாது என அப்போட் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►