இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் மறைத்து வைத்துள்ள கறுப்பு பணம் தொடர்பில் சரியான தரவுகளை தர முடியாது என இந்திய அரசிற்கு கைவிரித்துள்ளது சுவிஸ் வங்கி.இந்தியாவின் மாநிலங்களில் சுவிஸ் வங்கியின் கறுப்பு பணம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் தெரிவித்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் மறைத்து வைத்துள்ள கறுப்பு பணம் கடந்தாண்டின் இறுதியில் 14100 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் முந்தைய ஆண்டில் இது ரூ.85147 கோடியாக இருந்ததாகவும் தகவல் வெளியானதாக தெரிவித்தார்.
மேலும் இந்த நிலையில் கடந்த 23ம் திகதி இந்தியர்களின் பட்டியல் கேட்டு சுவிஸ் அரசிற்கு இந்திய அரசாங்கம் கடிதம் அனுப்பியிருந்தது.
ஆனால் கறுப்பு பணம் விவகாரம் குறித்த விவரங்கள் ஏதும் இல்லை என சுவிஸ் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் இரகசியம் காக்கும் நடவடிக்கை காரணமாக சில விவரங்களுக்கு மட்டுமே சுவிஸ் பதிலளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply