ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்ஸில் இலங்கை தொடர்பாக முன்னெடுக்கவுள்ள சர்வதேச விசாரணையை ஆதரிக்கவில்லை என மோடி அரசாங்கம் தெரிவித்துள்ளது.இந்திய வெளிவிகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் இதனை இலங்கை வெளிவிவவகார அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அமைப்புகள் மனித உரிமை கரிசனைகளுக்கு தீர்வு காணமுயலும் போது தண்டிக்கும் விதத்தில் நடந்து கொள்ள கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விசாரணைகளுக்கு இந்தியா தனது ஆட்சேபனையை தெரிவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சகப் பேச்சாளா சையட் அக்பருதின் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ஜெனீவாவில் கடந்த மார்ச் மாதம் சர்வதேச விசாரணையை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது சுஷ்மா ஸ்வராஜின் பீரிஸிற்கான இந்த செய்தி மிக முக்கியத்தவம் வாயந்ததாக கருதப்படுகின்றது.
தேர்தலுக்கு முன்னர் பாரதீய ஜனதா கட்சி அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் இலங்கை தொடர்பாக மென்போக்கை கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply