நிந்தவூர் அல்லி முல்லை சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்தார். கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் மோதியே அவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அல்லி முல்லை எனும் இடத்திலேயே விடிகாலை 5 மணிக்கு இந்த விபத்து இடம்பெற்றது என பொலிஸார் தெரிவித்தனர்.
சாய்ந்தமருதைச் சேர்ந்த முகம்மது மீரா முகையதீன் (வயது 60) என்பவரே உயிரிழந்தவராவார். சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply