அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்கள் தொடர்பில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. குற்ற புலனாய்வு பிரிவினர் ஹக்கீமிடம் விசாரணை நடத்த ஆயத்தமாகி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணை நடத்த சபாநாயகரின் அனுமதி விரைவில் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. சம்பவத்தின் போது உயிரிழந்தவர்கள், அவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் தொடர்பில் அமைச்சர் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த விடயங்கள் குறித்தே அமைச்சரிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகக் கூறப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் பொய்யானவை என அமைச்சர் குறிப்பிட்டிருந்தார் எனவும் அது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை பொது பல சேனா அமைப்பு நீதியமைச்சர் ஹக்கீமை குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply