blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, July 11, 2014

முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ஓய்வூதியம்

newsநாடு முழுவதிலுமுள்ள முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும் அதன் சாரதிகளுக்கும் காப்புறுதி நஷ்டஈடு கிடைக்கும் வகையில் ஓய்வூதியத்துடன் கூடிய சமூக பாதுகாப்பு காப்புறுதி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நேற்று பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச வாய்மொழி மூல கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் சரத் அமுனுகம இத்தகவலை தெரிவித்தார்.

மாவட்ட மட்டத்தில் முச்சக்கர வண்டிகளின் விபரங்களை திரட்டியே இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் 18 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட சேமிப்பு திட்டத்தின் கீழ் அங்கத்துவம் பெறும் சகல முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும் அதன் சாரதிகளுக்கும் அவர்களுக்கு 60 வயதாகும் தினத்திலிருந்து வாழ் நாள் பூராவும் மாதாந்த ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்படும்.

இதன் போது அங்கத்தவர்கள் தாம் விரும்பும் ஓய்வூதியத் தொகையை தீர்மானிக்க முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மாவட்ட செயலகங்கள் பிரதேச செயலகங்களுடாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய முச்சக்கர வண்டி தொழில் சங்க சம்மேளனத்தின் ஒத்துழைப்புடன் நாடளாவிய ரீதியில் இதனை செயல்படுத்த  திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►