பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடுக்கும் தாக்குதல்களை நாடாளுமன்றத்தில் வன்மையாகக் கண்டித்த நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம், யுத்தக்குற்றத்துக்காக எவராவது தண்டிக்கப்படவேண்டுமானால் அந்தத் தண்டனையை இஸ்ரேல் பிரதமருக்கு வழங்கவேண் டும் எனவும் கூறினார்.
அத்துடன், இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் துணைபோவதைக் கண்டிக்கிறார் எனவும் கூறினார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவர் மேலும் கூறியவை வருமாறு:- "பலஸ்தீனப் பிரச்சினை பாரதூரமாகியுள்ளது.
சட்டத்தையும், நீதியையும், நியாயத்தையும் மதிப்பவர்களால் இதனைக் கண்டிக்காமல் இருக்கமுடியாது. காஸா பள்ளத்தாக்கில் இஸ்ரேல் கொடூரத் தாக்குதலைத் தொடுக்கின்றது. 500 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
எனினும், அமெரிக்க ஏகாதிபத்தியம் இதற்குத் துணைபோகும் வகையில் செயற்படுகின்றது. அதேவேளை, யுத்தக்குற்றத்துக்கு எவராவது தண்டிக்கப்படவேண்டுமானால் அதை இஸ்ரேல் பிரதமருக்கு எதிராகச் செய்யவேண்டும்.
புனித மதத்தலமான அல்ஹக்ஷா மீது கூட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவ்விடத் தில் ஏனைய மதத்தலங்களும் இருக்கின்றன. புனித நோன்பு மாதத்தில் இவ்வாறு கொடூரத் தாக்குதல் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது" - என்று தெரிவித்தார் நீதியமைச்சர் ஹக்கீம்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, July 26, 2014
காஸா மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா துணை! போர்க் குற்றத்தண்டனையை இஸ்ரேல் பிரதமருக்கு வழங்குக!! - ஹக்கீம்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
சீரற்ற வானிலை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ர...
-
இப்பரீட்சை பரீட்சை திணைக்களத்தினால் சிங்களம்,தமிழ் ஆகிய மொழிகள் மூலம் 2014.08.09 ஆம் திகதி நடாத்தப்படும்.
-
பிரான்ஸில் 14 வயதே ஆன சிறுமி ஒருவர் தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply