blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, July 26, 2014

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டும் உயிரிழக்காத கைதி!!

Kaithiஅமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் இரட்டை கொலை வழக்கு ஒன்றில் ஜோசப் உட் (55) என்ற கைதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை நிறுத்தி வைக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

இதையடுத்து அவருக்கு அரிசோனா மாகாண சிறையில் மரண தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அமெரிக்க நேரப்படி நேற்று மதியம் 1.52 மணிக்கு அவருக்கு விஷ ஊசி போடப்பட்டது. ஆனால் அவருக்கு உடனே மரணம் நிகழவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் 3.49 மணிக்குத்தான் உயிர் பிரிந்தது.

இடைப்பட்ட நேரத்தில், நெருக்கடி கால மனுக்களை அவரது சட்டத்தரணிகள், பல்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்தனர். அவற்றில், தங்கள் கட்சிக்காரருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி விட்டு, உயிர்காக்கும் அவசர சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

ஆனால் அவற்றை நீதிமன்றங்கள் ஏற்க மறுத்து விட்டன.
ஜோசப் உட் மரண போராட்டத்தில் இருந்த தகவல், மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அரிசோனா மாகாண கவர்னர் ஜான் பிரிவர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜோசப் உட்டுக்கு மரண தண்டனை நிறைவேற்றியபோது உடனிருந்த பத்திரிகையாளர் மைக்கேல் கீபர், ஜோசப் உட் மரணத்தை தழுவுமுன் 660 முறை மூச்சு திணறலால் அவதியுற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►