மதுவிற்கு அடிமையான கணவரால் ஏற்பட்ட மன விரக்தியில், மனைவி, தன் இரு
மகள்களை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த தேசிங்கு, 45; கட்டிட தொழிலாளி. இவரது மனைவி, அமுதா, 40. இவர்களுக்கு, அஸ்வினி, 21, தேன்மொழி, 20, நிவேதா, 15, பவித்ரா, 13, ஆகிய நான்கு மகள்கள் இருந்தனர்.
இதில், அஸ்வினி, தேன்மொழி ஆகியோருக்கு திருமணமாகி விட்டது. செங்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், நிவேதா, 10ம் வகுப்பும்; பவித்ரா, 8ம் வகுப்பும் படித்து வந்தனர்.
தேசிங்கு, தினமும், மது குடித்து விட்டு, மனைவியுடன் தகராறு செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, மது போதையில் வந்த தேசிங்கு, மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதனால், விரக்தியடைந்த அமுதா, அன்று மாலை, நிவேதா, பவித்ரா ஆகியோரை, வீட்டருகே இருந்த விவசாய நிலத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு, அவர்களின் கை, கால்களை கட்டி, கிணற்றில் தள்ளிவிட்டு, அமுதாவும் குதித்தார்.
அக்கம் பக்கத்தினர், விரைந்து சென்று, கிணற்றில் விழுந்தவர்களை மீட்டனர். அதற்குள், நிவேதாவும், பவித்ராவும், மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அமுதா, செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.செங்கம் பொலிசார் விசாரிக்கின்றனர்.

No comments:
Post a Comment
Leave A Reply