blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, July 10, 2014

மாதாந்த கொடுப்பனவுகளைப் பெற்றுத்தரக்கோரி ஊனமுற்ற இராணுவத்தினர் அரசிற்கு எதிராக வழக்கு!

இலங்கையில் தொடர்ந்து வந்து மோதல்களின் போது உடற்திறன் பாதிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்த கொடுப்பனவுகளை பெற்றுத்தருமாறு கோரி அரசாங்கத்திற்கு எதிராக ஊனமுற்ற முன்னாள் இராணுவத்தினர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். 

அந்த வழக்கின் விசாரணைகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது, பிரதிவாதியான அரசாங்கத்திற்கு பதிலளிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

உதவித் தொகைகளை பெற்றுத்தருமாறு கோரி ஊனமுற்ற முன்னாள் இராணுவ வீரர்கள் 292 பேர் சார்பில் ஊனமுற்ற இராணுவ உறுப்பினர்கள் சங்கம் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

ஊனமடைந்த காரணத்தினால் இராணுவத்தை விட்டு நீக்கப்படும் படையினர் 55 வயதில் ஓய்வூதிய தொகையை பெறும்வரை அவர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்பட வேண்டும் என இராணுவ சட்ட விதிகள் கூறுகின்றன என்றாலும், அவ்வாறு சம்பளம் வழங்குவதை இராணுவ நிர்வாகம் நிறுத்திவைத்துள்ளதாக ஊனமுற்ற இராணுவ உறுப்பினர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தமது சங்கத்தின் உறுப்பினர்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாவதால், இந்த வழக்கை தாம் தொடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அரச தரப்பு சட்டத்தரணி கால அவகாசம் கோரியதை அடுத்து 28 ஆம் திகதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►