blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, July 10, 2014

சமூக வலைத்தளங்கள்; 32% வீதமானோருக்கு திருமண முறிவு ஏற்படும் அபாயம்!


நீங்கள் புதிதாகத் திருமணமான அதேநேரம் Facebook போன்ற சமூக வலைத் தளங்களை அதிகமாகப் பாவிப்பவரா?

அதிலும் உங்களது தனிப்பட்ட விடயங்களை அதிகம் பரிமாறிக் கொள்பவரா? ஆம் எனில் நீங்கள் மிக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்! 

ஏனெனில் Facebook போன்ற சமூக வலைத் தளங்களைப் பாவிப்பவர்களில் 32% வீதமானோர் தமது வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு அல்லது மண முறிவு ஏற்படும் அபாயத்தைச் சந்தித்திருப்பதாக புதிய கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவிக்கின்றது.

அமெரிக்காவின் பொஸ்டொன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் திருமணத் தொடர்பு, விவாகரத்து போன்ற முக்கிய சமூகப் பிரச்சினைகளில் சமூக வலைத் தளங்கள் எந்தளவு பங்களிப்புச் செய்கின்றன என்பது குறித்த ஆய்வில் ஈடுபட்டனர்.

இதில் அவர்கள் Facebook தளம் பல குடும்பங்களில் விவாகரத்து மற்றும் வாழ்க்கைத் துணைவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட முக்கிய காரணமாகக் கணிசமான அளவு பங்களிப்பை வகித்திருந்தது அறியப் பட்டுள்ளது.

அதாவது 2008 தொடக்கம் 2010 வரை அமெரிக்காவின் 43 மாநிலங்களில் விவாகரத்து வீதத்துடன் தனிப்பட்டவர்களின் Facebook ஊடான கருத்துப் பரிமாற்றத்தின் தொடர்பு ஓப்பிட்டுப் பார்க்கப் பட்டது. இதனை குடும்பவியல் பேராசிரியர் ஜேம்ஸ்.ஈ.காட்ஷ் தலைமையேற்று செயற்படுத்தினார்.

இதன் போது வெளியான அதிர்ச்சித் தகவலின் படி Facebook பாவனையாளர்களில் அதிகரித்த 20% வீத அளவு விவாகரத்து ஆனவர்களில் 2.18% வீத அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலைக்கு முக்கிய காரணமாக வேலையின் தகுதி, வயது, இனம் மற்றும் உறவு தொடர்பான திரிபுபடுத்தப் பட்ட தகவல் பரிமாற்றம் கூறப்படுகின்றது.

மேலும் இன்றைய தகவல் தொழிநுட்ப யுகத்தில் கைத்தொலைபேசி போன்ற சாதனங்களினூடாக மனிதனின் நடத்தை எவ்வாறு திரிபுபடுத்தப் பட்டு உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்றும் இக்கல்வியில் ஆய்வு செய்யப் பட்டு விளக்கப் படுத்தப் பட்டுள்ளது.

சமூக வலைத் தளங்களை அதிகம் பாதிக்கும் ஜோடிகள் ஏனையவர்களை விட 11.4% வீதம் குறைவாகவே தமது மண வாழ்க்கையில் சந்தோசமாக இருப்பதாகக் கூறியிருப்பதும் 32% வீதம் அதிகமாக வீட்டை விட்டு வெளியே இருப்பது சௌகரியம் அளிக்கின்றது எனவும் கருத்துக் கணிப்பில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►