எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, July 9, 2014
பாஜக தேசிய தலைவராக அமித் ஷா நியமனம்
இந்திய பிரதமர் நநேந்திர மோடிக்கு நெருக்கமான நண்பராக கருதப்படும் அமித் ஷா பாரதீய ஜனதாக் கட்சியின் தேசிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாரதீய ஜனதாக் கட்சி பாரிய வெற்றிபெறுவதற்கு அமித் ஷா பாரிய பங்காற்றியிருந்தாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலின் போது உத்தர பிரதேஷத்தில் தாமாக முன்வந்து பாஜகாவை பலப்படுத்து பணிகளை அமித் ஷா ஏற்றிருந்ததுடன் மாநிலத்தின் 80 தொகுதிகளில் 73 இல் பாஜக அமோக வெற்றிபெற்றிருந்தது.
இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக அமித் ஷாவை கட்சியின் நாடாளுமன்றக் குழு தெரிவுசெய்துள்ளதாக மத்திய உள்விவகார அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
அமித் ஷாவின் நியமனம் சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் ஜம்மு காஷ்மீர், ஹரியானா, ஜார்கண்ட் மற்றும் மகராஷ்டிரா போன்ற மாநிலங்களிலுள்ள பாஜக ஆதரவாளர்களை ஊக்குவிப்பதாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பவள விழா (75ஆம் ஆண்டு) தொடக்க உரையின் போது பொழிந்த கவி...
-
பள்ளி வாழ்வில் இருந்து தொலைந்த நண்பர்கள், வாழ வழி தேடி கடல் கடந்து சென்ற நம் ஊர் உறவுகள் என அனைவரையும்
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
சீரற்ற வானிலை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ர...
No comments:
Post a Comment
Leave A Reply