அதன்பேரில் இன்ஸ்பெக்டர் இளவரசு தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்ட போது தாராபுரம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மில்லில் சூதாட்டம் நடத்திக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
அம்பிளிக்கை டி.கே.புதூரை சேர்ந்த மணிகண்டன் (வயது54), ஒட்டன்சத்திரம் தங்கவேலு (45), தும்மிச்சம்பட்டியை சேர்ந்த கார்த்திக் (28) ஆகிய 3 பேரும் நாளை (8–ந் தேதி) நடக்கும் போட்டியில் ஜெர்மனி அணி வெற்றி பெரும் என்றும் பிரேசில் அணி தோற்கும் என்றும் சூதாட்டம் நடத்தி இதில் மேலும் சிலரை பணம் கட்ட முயற்சி செய்தது தெரிய வந்தது.
அரண்மனைப்புதூரை சேர்ந்த மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் போலீசார் மேற்படி 3 பேரையும் கைது செய்தனர்.
No comments:
Post a Comment
Leave A Reply