blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, June 28, 2014

நடுவானில் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை ரசித்துப் பார்த்த ஒபாமா (Photos)

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு ஒரு அரிய வாய்ப்பை அவரது அதிகாரப்பூர்வ விமானமான ஏர்போர்ஸ் ஒன் ஏற்படுத்திக் கொடுத்தது.
அமெரிக்கா, ஜெர்மனி இடையிலான உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை விமானத்தில் பறந்தபடி பார்த்து ரசித்துள்ளார் ஒபாமா. 
 
இந்த காட்சியை புகைப்படம் எடுத்து வெளியிடவும் செய்துள்ளது வெள்ளை மாளிகை. 
 
மற்ற தலைவர்களுக்கு பெரும்பாலும் கிடைக்காத வாய்ப்பு இது. ஆனால் அமெரிக்கா என்ற காரணத்தால் ஒபாமாவுக்கு இது கிடைத்துள்ளது. 
 
தான் போய்ச் சேர வேண்டிய இடம் வரும் வரை.  அவரும் அமெரிக்காவின் ஆட்டத்தை ரசித்துப் பார்த்தார்.
 
நேரடியாக ஒளிபரப்பான இந்தப் போட்டியை ரசித்துப் பார்த்தார் ஒபாமா. அவருடன் அவரது உதவியாளர்களும் ரசித்துப் பார்த்தனர். 
 
போட்டியைப் பார்க்கும்போது கொறித்துக் கொள்வதற்காக ஏகப்பட்ட சிப்ஸ், ஸ்னாக்ஸ்களும் அவர்களுக்காக அளிக்கப்பட்டது.
 
 மின்னபோலிஸ் நகரில் விமானம் தரையிறங்கியபோது போட்டியும் முடிவடைந்தது. இந்தப் போட்டியில் ஜெர்மனி அணி, தாமஸ் முல்லர் போட்ட அபாரமான கோல் காரணமாக 1-0 என்ற கணக்கில் வென்றது.
 

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►