ஹிஜ்ரி 1435 ஆம் வருடத்திற்கான புனித ரமழான் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று கூடவுள்ளது.தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மஃரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.
இன்றைய மஃரிப் தொழுகை நேரமாகிய 6.30 முதல் புனித ரமழான் மாத தலைப்பிறையை அவதாகிக்குமாறு சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உள்ளிட்ட பிறைக்குழு கேட்டுள்ளது.
தலைப்பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது தொலைபேசி மூலம் தொடர்புகொண்டோ அறிவிக்க முடியும்.
0115 234 044 அல்லது 0112 432 110 அல்லது 0112 390 783 அல்லது 0777 316 415 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தலைபிறை தொடர்பில் அறிவிக்க முடியும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் மேலும் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply