முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த நான்குபேர் படகுமூலம் இன்று அதிகாலை தமிழகத்தின் தனுஸ்கோடியைச் சென்றடைந்தனர்.
முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த அந்தோணி குரூஸ் இவரது மனைவி செல்வி குரூஸ் மற்றும் இவர்களது குழந்தைகளான ரோமேரியா, ரியான்ச் ஆகிய நான்குபேருமே தமிழகம் சென்றுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் தனுஸ்கோடி பகுதியில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் படகு மூலம் இலங்கையில் இருந்து வந்ததாக அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலோர காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து அங்கு விரைந்த கடலோர காவல்துறையினர் இலங்கையில் இருந்து வந்தவர்களை முகுந்தராயர் சத்திரம் காவல்துறை சோதனை சாவடிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, தனது மனைவி செல்வி குரூஸ் கிட்னி பாதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் தொழில் மற்றும் வேலை வாயப்பு கிடைக்க மிகவும் சிக்கலாக இருருக்கிறது.
இதனால் மனைவி செல்வி குரூஸ்க்கு சிகிச்சை அளிக்க போதுமான பணம் கிடைக்கவில்லை. எனது உறவினர் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில் இருக்கின்றனர்.
அவர்களின் உதவியுடன் இங்கு வந்த சிகிச்சை பெறலாம் என்பதால் தலைமன்னாரில் இருந்து 20 ஆயிரம் ரூபா பணம் கொடுத்து படகு மூலம் தனுஸ்கோடிக்கு வந்தோம்.- என்று அந்தோணி குரூஸ் தெரிவித்தார்.
இவர்களிடம் மத்திய, மாநில உளவுப்பிரிவு பொரிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அத்துடன் கடலோர காவல்துறையினர் மண்டபம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, June 21, 2014
முல்லைத்தீவு குடும்பம் படகு மூலம் தமிழகத்துக்குச் சென்றது
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கென வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களால் அங்கு பணியாற்றும்...
-
நேற்று இரவு 9 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் அரச பேருந்துடனான விபத்தில் சம்பவ இடத்திலேயே
-
தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இந்தியா மேல்முறையீடு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுமன்னி...
-
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளான மலேசிய விமானம், மாயமானதாக மலேசிய ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply