யாழ்ப்பாணம் முஸ்லீம் வட்டாரத்தில் உள்ள கார்மேல் பள்ளிவாசல் மீது இனம் தெரியாதோர் மேற்கொண்ட தாக்குலில் பள்ளிவாசலின் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்துள்ளன. நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு மோட்டார் சையிக்கிள்களில் வந்த மூவர் பள்ளிவாசல் மீது கற்களை வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர் என்று அதன் நிர்வாகத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply