சிறுவர்
அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் மாவட்ட இணைப்பாளர்களாக
தேசிய ரீதியாக இணைத்துக் கொள்ளப்பட்ட உளவளத்துணை ஆலோசர்களுக்கான
பயிற்சியாளர்களை பயிற்றுவிக்கும் பயிற்சி வகுப்பு பெலவத்த,பத்ரமுள்ள
இக்டாட் பயிற்சி இப்பயிற்சி வகுப்பினைஆசியன் பௌண்டேசன் நடாத்தியது. உளரீதியாக பல்வேறு பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டிருப்பவர்களை உள ஆரோக்கியமுடையவர்களாக மாற்றுவதற்கான பொறிமுறையை தயார் செய்வதற்கான பயிற்சி நெறியாக அமையப்பெற்றது.
கிழக்கு மாகாணத்திலுள்ள இரு மாவட்டங்களில் மாத்திரம் இருவர் மாவட்ட உளவளத்துணை இணைப்பாளர்களாக
தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தின் இணைப்பாளராக எஸ்.
நிசான்தன் (உளவள ஆலோசகர்), அம்பாறை மாட்டத்தின் இணைப்பாளராக றினோஸ் ஹனீபா
(உளவள ஆலோசகர்) ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
தேசிய ரீதியாக 13 பேர் மாவட்ட உளவளத்துணையாளர்களுக்கான இணைப்பாளர்களாக மாவட்ட மட்டத்தில் நியமிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
தேசிய ரீதியாக 13 பேர் மாவட்ட உளவளத்துணையாளர்களுக்கான இணைப்பாளர்களாக மாவட்ட மட்டத்தில் நியமிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments:
Post a Comment
Leave A Reply