இதன்பிரகாரம் மாதகல் ராஜ ராஜேஸ்வரி கடற்றொழிலாளர் சங்கத்தினர் தங்களுக்கான மண்ணெண்ணெய் மானியம் பெற்றுத் தருமாறு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் இம் மானியம் வழங்கப்படவுள்ளது.
சில்லாலை சாந்த விநாயகர் கடற்றொழிலாளர் சங்கத்தினர் சிறிய தரை தொழில்களை வேறு இடங்களில் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து உதவுமாறு கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தனர்.
இக் கோரிக்கையை ஆராய்ந்த அமைச்சர் அவர்கள் தொழிலில் ஈடுபடவுள்ள பகுதிகளின் கடற்றொழிலாளர் சங்கங்களுடன் கலந்துரையாடி இதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.
அத்துடன் மாதகல் பகுதியில் மீள்குடியேற்றஞ் செய்யப்பட்ட மக்களும் தங்களுக்கான வீட்டு வசதிகள் தொடர்பில் கோரிக்கைகள் முன்வைத்துள்ளனர்.
இவரது கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து உரிய முடிவெடுப்பதாக அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் ஈ.பி.டி.பியின் வலிதென் மேற்கு இணைப்பாளர் ஜீவா உடனிருந்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply