blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, June 11, 2014

வருட இறுதிக்குள் கிளிநொச்சி முழுவதும் மின்சாரம் - ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்

இவ்வருட இறுதிக்குள் கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் மின்சாரம் வழங்குவதை இலக்காக  கொண்டு பணிகள் முன்னெடுக்கப்படும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (11) இலங்கை மின்சார சபையின் கிளிநொச்சி விடுதியில் இடம்பெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் அனைவருக்கும் மின்சாரம் என்ற அரசின் கொள்கைக்கு அமைவாக இவ்வருட இறுதிக்குள் கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களுக்கும் மின்சார வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தற்போது இலங்கை மின்சார சபையின் வடக்கின் வசந்தம் திட்ட பொறியியலாளர்கள் பலர் மதிப்பீட்டு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஏற்கனவே மின்சாரம் வழங்கப்பட்ட கிராமங்களில் மின்சாரம் கிடைக்காமல் விடுப்பட்டிருக்கும் பிரதேசங்களுக்கும், புதிதாக மின்சாரம் வழங்கவேண்டிய பிரதேசங்களுக்குமான மதிப்பீட்டு பணிகள் நிறைவுற்று தொடர்ந்து பணிகள் முன்னெடுக்கப்படும். அதனடிப்படையில் இவ்வருட இறுதிக்குள் கிளிநொச்சியின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் மின்சாரம் வழங்குவதே இலக்கு  எனவும் குறிப்பிட்ட அவர் அதனை நோக்கிய பணிகள் விரைந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலின் போது இலங்கை மின்சார சபையின் வடக்கு பிரதி பொது முகாமையாளர் குணதிலக, வடக்கின் வசந்தம் திட்ட முகாமையாளர் குணசீலன், மின்சார சபையின் வர்த்தக பிரிவு பொறியியலாளர் திருமதி கோபிகா, மின்சார சபையின் கிளிநொச்சி பிரதேச பொறியியலாளர் நிரோஜன், வடக்கின் வசந்தம் மின் பொறியியலாளர் அமில டயஸ், கிளிநொச்சி மின் அத்தியட்சகர் குகராஜ, மற்றும் மின்சார சபையின் பொறியியலாளர்கள்,பளை பிரதேச சபையின் உறுப்பினர் அன்ரன் அன்பழகன்,கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்கள் னோகரன்,இராமச்சந்திரன்,கிருஸ்ணசாமி, சபாநாயகம்,பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர் இராசலிங்கம், பிரதேச மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.



No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►