இங்கிலாந்துடனான
டெஸ்ட் தொடரில் பந்து வீச்சாளர்களின் சவாலை எதிர்கொள்ள இலங்கை துடுப்பாட்ட
வீரர்கள் தயார்நிலையில் உள்ளதாக இலங்கை அணியின் ஆலோசகர் கிறிஸ் அடம்ஸ்
தெரிவித்துள்ளார்.லோட்ஸ் மைதானத்தின் ஆடுகளமே இலங்கை அணி வீரர்களுக்கு சவாலாக அமையும் என கிரிஸ் அடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும் ஒருநாள் தொடரில் மிகச் சிறப்பான முறையில் தமது திறமையை வெளிப்படுத்தி இலங்கை அணி வீரர்கள் சிறந்த மனநிலையில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகாமாக காணப்படுமானால் இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் மிகச் சிறந்த முறையில் தனது திறமையை வெளிப்படுத்துவார் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஸ்டுவட் ப்ரோட் மற்றும் அண்டர்சன் ஆகியோரை தவிர இங்கிலாந்து அணியின் ஏனைய பந்து வீச்சாளர்கள் அனுபவமற்றவர்கள் என கிறிஸ் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் டெஸ்ட் தொடரில் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டி கணிசமான ஓட்டங்களை இலங்கை அணி பெற்றுக் கொள்ளுமேயானல் இங்கிலாந்’து அணிக்கு அது பாரிய சவாலாக அமையும் என கிறிஸ் அடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்த்ககது.
No comments:
Post a Comment
Leave A Reply