
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் நிலையங்களிலிருந்தும் எதிர்வரும் 28ஆம் திகதி தொடக்கம் விசேட பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு பிராந்திய செயலாற்று முகாமையாளர்
செ.கனகசுந்தரம் தெரிவித்தார்.
மேலும், யாத்திரிகர்களின் நலன் கருதி கதிர்காமம் பஸ் தரிப்பிடத்தில் விசேட கரும பீடமும் 28ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலிருந்து மாவிட்டபுரத்திற்கு இரவு 8.30 வரை பஸ் சேவைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் இரண்டாம் திகதி ஆரம்பமாகவுள்ள மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழா ஜீலை, 26 ஆம் திகதி கீரிமலை கண்டாங்கி தீர்த்தக்கரையில் நடைபெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது.
இரவு வேளையில் நடைபெறவுள்ள திருவிழாக்களில் கலந்துகொள்ளும் பக்தர்களின் நலன்கருதி இரவு 8.30வரை பஸ் சேவைகளை நடத்துவதற்கு உற்சவம் தொடர்பான கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply